கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸின் கேட்கப்பட்டது. அவர் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், அவர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதியிடம் பேசி வந்தனர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்ததால், இதிலும் நடிக்க சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் அதில் விஜய் சேதுபதியும் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், முக்கிய வேடத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







