உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான, 11 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நாளை (18-06-2021) தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதில் இருந்து 11 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், அஷ்வின், ஜடேஜா என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி ஆகிய வேகபந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அணி விவரம்:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.







