முக்கியச் செய்திகள் குற்றம்

நாங்குநேரியில் பார் ஊழியர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணை

நாங்குநேரியில் பார் ஊழியர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 40). இவர் நாங்குநேரியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சுமித்ரா (வயது 35) என்ற மனைவியும், தனுஸ்ரீ (வயது 5), இசைவி (வயது 3) என்ற மகளும் உள்ளனர். முத்துக்குமாரின் தாய் ராமு (வயது 75) மைத்துனர் ராஜேஷ் உள்ளிட்டோரும் அதே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவில் முத்துக்குமார் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அதன்பின் மறுநாள் காலை வீட்டு வாசலில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது முகத்தில் காயம் இருந்ததால் தவறி விழுந்ததில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. பின்னர் அவரது மைத்துனர் ராஜேஷ் (29) நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதில் முத்துக்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து நாங்குநேரி இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பதில் அளித்ததால், முதுக்குமாரின் மனைவி மனைவி சுமித்ராவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருவதால் முத்துக்குமாரின் சாவில் அவரது மனைவிக்கு தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். மேலும் திருமணத்தை மீறிய தொடர்பு காரணமாக முத்துக்குமார், அவரது மனைவி சுமித்ரா உடந்தையுடன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கேரள மருத்துவ மாணவர்கள் நடனமாடிய வைரல் வீடியோ!

Gayathri Venkatesan

மக்களோடு நெருங்காமல், சட்டை கசங்காமல் அரசியல் செய்பவர் மு.க.ஸ்டாலின்- ஜெயக்குமார்!

Jayapriya

சசிகலாவுடன் தொலைபேசி உரையாடல்: 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்!

Vandhana