முக்கியச் செய்திகள் சினிமா

மாநாடு படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்!

மாநாடு படத்தில் வேலை பார்த்த சுமார் 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசளித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷிணி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் காலதாமதாமான படத்தின் படபிடிப்பு, தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது.

சிம்பு மற்றும் கல்யாணி

இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘மாநாடு’ படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மாநாடு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழு

Halley karthi

பத்ம விருதுகளுக்கு சிபாரிசு: மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு

Saravana Kumar

வீட்டில் தனியாக வசித்தவர் எலும்புக் கூடாக மீட்பு

Gayathri Venkatesan