முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி

மாநில ஆளுநராக இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு விமர்சித்துள்ளது.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாம் அனைவரும் தேசிய அளவிலான பார்வையை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். மாநில ரீதியாக சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி,  “மாநிலமாகச் சிந்திக்கக் கூடாது – இந்தியா என்ற நாடாகச் சிந்திக்க வேண்டும் என்று ‘மாநில’ ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பேசி இருக்கிறார்கள், மாநிலங்கள் என்று பேசுவதே பிரிவினை என்பதைப் போல அவரது கருத்து இருக்கிறது” என தலையங்கம் தீட்டியிருக்கிறது.

‘மாநில சுயாட்சி’ என்று மட்டுமே யாரும் சொல்வது இல்லை. ‘மத்தியில் கூட்டாட்சி’ என்பதையும் இணைத்தேதான் சொல்கிறோம். அப்படிச் சொல்வதற்குக் காரணம், ‘மத்தியில்’ என்பதோடு இணைந்து கொண்டே சொல்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவில் இருக்கும் மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் மெல்ல மெல்ல பறிக்கும் அரசாக பா.ஜ.க. அரசு இருக்கிறது எனவும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.

மாநிலப்பட்டியலில் இருக்கும் மாநில அதிகாரங்களில் கூட, தனது மூக்கை மட்டுமல்ல தனது உடலையே ஒன்றிய அரசு நுழைத்து வருகிறது என்றும், மக்களுக்கு மிக அருகில் இருப்பது மாநிலங்கள்தான். மக்களின் அனைத்து அடிப் படைத் தேவைகளையும் தீர்ப்பவை மாநிலங்கள்தான். மக்கள் எதிர்பார்ப்பது என்பதும் மாநிலங்களிடம்தான். அப்படி இருக்கும் போது ‘மாநிலங்களை’ இல்லாமல் செய்வது என்பது ‘மக்களையே’ இல்லாமல் செய்வது ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மாநிலமே இருக்கக் கூடாது என்று நினைப்பதன் அடுத்த கட்டம்தான் பஞ்சாயத்துகளே, உள்ளாட்சி அமைப்புகளே இருக்கக் கூடாது என்பது ஆகும். உள்ளாட்சி அமைப்புகளே இருக்கக் கூடாது என்பவர்கள், தனித்தனி வீடுகள் இருப்பதே தவறு என்று சொல்லத் தொடங்குவார்கள். ‘வீடுகள் வேண்டாம் நாடுகள்தான் தேவை’ என்று பெரிய தத்துவத்தைப் போலச் சொல்வார்கள் என்றும், ‘மாநில ஆளுநராக‘ இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுவது தான் நகைப்புக்குரியது எனவும் விமர்சித்துள்ளது முரசொலி.

Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

Halley Karthik

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை; தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

Arivazhagan CM

மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் நடிகைகள் குஷ்பு கௌதமி ட்விட்

Jeba Arul Robinson