முக்கியச் செய்திகள் இந்தியா

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநர் ஆர். என்.ரவி திடீரென்று இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி , சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவர், திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை அடுத்து, அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாகலாந்தில், பிரிவினைவாதிகள் என்று நினைத்து  பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சகம் என்ன செய்துகொண்டிருக்கி றது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அங்குப் பதற்றத்தைத்  தணிக்க இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஏற்கனவே நாகலாந்து ஆளுநராக இருந்தவர் என்பதால், அங்குள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் திடீரென டெல்லி சென்றுள்ள தாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சைக்கிள் பெண் ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் உயிரிழப்பு!

EZHILARASAN D

புஷ்பா – 2 திரைப்படத்தில் நடிக்க ஆசையா!

Web Editor

பிரதமர் மோடிக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

Mohan Dass