முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சி

மணிமேகலை இலக்கியத்தை உலக மொழிகளில் மொழிபெயர்க்கிறது செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.

தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலகம் அறியச் செய்ய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருக்குறளைத் தொடர்ந்து பௌத்த இலக்கியமான மணிமேகலையை, உலக மொழிகளில் மொழிபெயர்க்க பணிகள் மேற்கொண்டு வருகிறது.

சிங்களம், மலாய், தாய், சீனா, கொரியன், மங்கோலியன், ஜப்பான், பர்மீஸ் உள்ளிட்ட 20 உலக மொழிகளில் மணிமேகலை இலக்கியத்தை மொழிபெயர்க்கிறது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். பௌத்த தத்துவங்களை பேசும் சங்க கால இலக்கியமான மணிமேகலையின் பெருமையை, பௌத்த மதம் பரவலாக உள்ள இலங்கை, சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பரப்ப முயற்சி எடுத்துள்ளது.

முன்னதாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களை மொழிபெயர்க்கும் பணிகளை நிறைவு செய்தது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். சங்க இலக்கியங்கள் அனைத்தையும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளிலும் மொழிபெயர்க்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

டீசல் திருடியதாக ஓட்டுநர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Saravana Kumar

”நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது”- அப்போலோ மருத்துவமனை அறிக்கை!

Jayapriya

பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை ; வைகோ அதிரடி

Halley Karthik