முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் 31,079 பேருக்கு கொரோனா: 486 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று, சமீபகாலமாக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 ஆயிரத்து 079 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 20 லட்சத்து 09 ஆயிரத்து 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 3 லட்சத்து 12 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 ஆயிரத்து 225 பேர் குணமடைந்து கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 22 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 2762 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் சென்னையில் 107 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 4843 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 1379 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 788 பேருக்கும் திருவள்ளூரில் 967 பேருக்கும் திருச்சியில் 1287 பேருக்கும் கோவையில் 3937 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

Advertisement:

Related posts

ஹரியானா மாநிலத்தில் பார்கள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி!

Saravana Kumar

கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!

Karthick

தடுப்பூசி தயாரிப்புக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு!