தமிழ்நாட்டில் புதிதாக 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 10 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 565 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 24 லட்சத்து 43 ஆயிரத்து 141 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். 263 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 251 பேருக்கும் சேலத்தில் 205 பேருக்கும் கோவையில் 366 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 10 பேருக்கும் பெரம்பலூரில் 17 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.







