தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 26 ஆயிரத்து 465 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 6 வது நாளாக, பாதிப்பு ஆறாயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
சென்னையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 6,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,70,596 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 22,381 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,73,439 ஆக இருக்கிறது. கொரோனாவால் இன்று மட்டும் 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,35,355 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.







