மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மக்கள் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமை…

மக்கள் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஏறக்குறைய 25 ஆயிரமாக உள்ளது எனவும், மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.