முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் போட்டிகளை நடத்துவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.  கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:

காளையுடன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேர் மட்டுமே  கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மேலும் காளையுடன் கலந்து கொள்ளும் உரிமையாளர், உதவியாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டை காண்பதற்கு 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பார்வையாளர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்!

Halley Karthik

செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!

Halley Karthik

சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்

Ezhilarasan