முக்கியச் செய்திகள் தமிழகம்

உளவுத்துறையின் எச்சரிக்கை; ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு

உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்களில் இராமேஸ்வரம் இராமநாதசாமி கோயிலும் ஒன்றாகும். அதுபோல் ஏற்கனவே இராமேஸ்வரம் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே கோயிலின் நான்கு வாசல் பகுதிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த நான்கு ரத வீதிகள் வழியாக முக்கிய பிரமுகர்கள் வாகனத்தை தவிர எந்த ஒரு வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை, இந்தநிலையில் இராமேஸ்வரம் கோயிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனை தொடர்ந்து இராமேஸ்வரம் கோயிலில் கடந்த சில நாட்களாகவே தற்போது இருப்பதை விட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட போலீசார் கூடுதலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல் அவ்வப்போது கோயிலின் அனைத்து பிரகாரங்களிலும் போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கோயிலின் மேல் பகுதி மற்றும் ரத வீதிகளிலும் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் சுற்றி திரிகின்றனரா என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இராமேஸ்வரம் கோயிலில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நடிகை கேத்ரினா- விக்கி கவுசல் திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்

Ezhilarasan

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 170 பேர் மாயம், 19 பேர் உயிரிழப்பு!

Jayapriya

வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை – முதலமைச்சர் அறிவுறுத்தல்

Gayathri Venkatesan