சொந்தக் கட்சித் தொண்டர்களையே பவுன்சர்களை கொண்டு அச்சுறுத்துவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி?

தன் சொந்தத் தொண்டர்களுக்கே பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பொன்னேரியில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவின்போது, அதில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை பவுன்சர்கள் என்ற பெயரில் சிலர் அடாவடித்தனம் செய்து, தாக்க முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

ஓர் அரசியல் கட்சி என்பது தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும். ஆனால் சினிமா பாணி பவுன்சர் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து, சொந்தக் கட்சியினரையே மதிக்காமல் அவர்களைத் தாக்கும் செயலில் ஈடுபடுவது அப்பட்டமான ரவுடித்தனமாகும்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம்” என்று மார்தட்டிய தவெக, தன் சொந்தத் தொண்டர்களுக்கே பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக வழியில் அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் தவெக தலைவர் ஜோசப் விஜய்
இனியாவது தன் கட்சியினரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.