முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம்

அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம்: தமிழ்நாடு அரசு

கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கவச உடை மற்றும் சானிடைசர் உள்ளிட்ட 15 அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, 200 மில்லி அளவு கொண்ட சானிடைசர் அதிகபட்சமாக 110 ரூபாய்க்கும், என் – 95 முகக் கவசம் 22 ரூபாய்க்கும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ஜிக்கல் ஈரடுக்கு முகக் கவசம் 3 ரூபாய், மூன்றடுக்கு முகக் கவசம் 4 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கையுறை 15 ரூபாய்க்கும், ஆக்சிஜன் முகக் கவசம் 54 ரூபாய்க்கும் விற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகத்தடுப்பு கவசம் 21 ரூபாய், பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை 273 ரூபாய்.

ஆக்சி மீட்டர் ஆயிரத்து 500 ரூபாய் என விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

விலை பட்டியல்,

* கிருமிநாசினி 200 (எம்எல்) – ரூ.110

* N95 முகக்கவசம் ( 1) – ரூ. 22

* ஈரடுக்கு முகக் கவசம் (1) ரூ. 3

* மூன்றடுக்கு முகக் கவசம் (1) ரூ. 4

* கையுறை – ரூ.15

* ஆக்சிஜன் முகக்கவசம் (1) – ரூ. 54

* முகத்தடுப்பு கவசம் – ரூ. 21

* பாதுகாப்பு கவச உடை (PPE கிட் ) – ரூ. 273

* ஆக்சி மீட்டர் – ரூ.1500

* ஒருமுறை பயன்படுத்தும் ஏப்ரான் (ஒரு யூனிட் ) – ரூ.12

* அறுவை சிகிச்சை கவுன் (ஒரு யூனிட் ) – 65

* எக்ஸாமினேஷன் கையுறை (Examination Gloves ) – ரூ. 5.75

* நான்-ரீப்ரீத்தர் மாஸ்க் (Non -Rebreather Mask ) – ரூ. 80

* ப்ளோ மீட்டர் (Flow Meter With Humidifier) – ரூ. 1520

* முக கேடயம் (Face Shield ) – ரூ. 21

Advertisement:

Related posts

அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : உதயநிதி

Niruban Chakkaaravarthi

இந்தியில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

Gayathri Venkatesan

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

Karthick