இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்!

உத்தரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 பிப்ரவரியிலிருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த சுசில் சந்திரா இந்தியத் தலைமை…

உத்தரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 பிப்ரவரியிலிருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த சுசில் சந்திரா இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் இவரது தலைமையில் நடத்தப்பட உள்ளன.

இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிவடையக்கூடிய உள்ள நிலையில் தற்போது அனூப் சந்திர பாண்டே இந்தியத் தேர்தல் ஆணையராக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனூப் சந்திர பாண்டே உத்தரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் (1984 பேட்ச்) அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனுபவம் கொண்டவராவார். முன்னதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோராவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்ததையடுத்து சுசில் சந்திரா தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.