முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசு பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக, 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஊக்கத்தொகை வழங்கும் பணிக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநரை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பீகார் பெண்!

Jeba

கொரோனா பலி எண்ணிக்கை 1,53,847 ஆக அதிகரிப்பு!

Niruban Chakkaaravarthi

புதிய கட்சிகள்: அவகாசத்தை 7 நாட்களாக குறைத்த தேர்தல் ஆணையம்!

Jeba