முக்கியச் செய்திகள் தமிழகம்

அமைச்சரவையில் தெரிந்துகொள்ளவேண்டிய சுவரஸ்யமான விஷயங்கள்!

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக அரசியல் வரலாற்றில் ஆளும் கட்சியில் முதலமைச்சருக்கு அடுத்து வெற்றி பெற்ற கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கே நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும். ஆனால் இந்த முறை அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மூத்த உறுப்பினராக உள்ள திமுக பொது செயலாளர் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் துரைமுருகன்

நிதி அமைச்சர் பதவி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியிலிருந்து 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தாத்தா தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி.ராஜன், அப்பா பழனிவேல் ராஜன் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர்.

சட்டமன்ற உறுப்பினராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பழனிவேல் தியாகராஜன் நிதி, நிர்வாகத் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இவர் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அதேபோல் மனித காரணிகள், உளவியல், நிர்வாக மேலாண்மையில் எம்பிஏ என பல பட்டங்களை பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

1990-ல் லேமன் பிரதர்ஸ், ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ், சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி நிர்வாக இயக்குநர் என பல சர்வதேச நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகுத்துள்ளார்.

அதேபோல் உள்ளாட்சி துறை ஊராக வளர்ச்சி துறை, நகர்புற வளர்ச்சி துறையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஊராக வளர்ச்சி துறைக்கு கே.ஆர். பெரியகருப்பன், நகர்புற வளர்ச்சி துறைக்கு கே.என்.நேரு அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

அதேபோல் மத்திய அரசு மாற்றியுள்ள துறைகளின் தன்மைக்கு ஏற்ப தமிழக துறைகள் மாற்றப்பட்டுள்ளன உதாரணமாக -ஜல் சக்தி – நீர்ப்பாசனம், skill India -/திறன் மேம்பாடு என இரண்டு புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திமுகவில் சமீபத்தில் உறுப்பினராக இணைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சார துறை வழங்கப்பட்டது. குறுகிய காலத்தில் திமுகவில் இணைந்தாலும் கட்சிக்காக அவர் உழைப்பை கருதி அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருமயம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றுள்ளவர் எஸ்.ரகுபதி. இவர் சட்டப் படிப்பில் இளங்கலை முடித்துள்ளார். 2004 முதல் 2007 வரை இந்திய அரசின், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.

திமுகவில் நீண்ட அனுபவம் கொண்டவர் சக்கரபாணி. ஒட்டன்சத்திரம் தொகுதியில் 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1996 முதல் 2021 தேர்தல் வரை தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை திமுக கொறடாவாக இருந்தவர்.

சக்கரபாணி மற்றும் சி.வி.கணேசன்

திமுக சட்டமன்ற உறுப்பினராக பல ஆண்டுகளாக சக்கரபாணி இருந்தாலும் இந்த முறைதான் அவருக்கு உணவுத்துறை பதவி வழங்கப்பட்டு அமைச்சராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் திட்டக்குடி (தனி) தொகுதியில் வெற்றிபெற்றுள்ள சி.வி கணேசனுக்கு முதல் முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைச்சரவையில் மிக குறைந்த வயதுள்ளவர் சுற்றுலாத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிவேந்தன். மருத்துவரான இவர் ராசிபுரம் தனி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

மதிவேந்தன் மற்றும் மா.சுப்பிரமணியன்

சென்னை வெள்ளம், கொரோனா போன்ற பல இக்கட்டான காலகட்டத்தில் கள பணியாளராகப் பார்க்கப்படுபவர் மா.சுப்பிரமணியன். இவருக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு மருத்துவர் இல்லாத ஒருவர் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகிறார். மா.சுப்பிரமணியன் முதல் முறையாக அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இந்த அமைச்சரவையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அதிக பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மீன்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இத்துறை அமைச்சராக உள்ளார்.

தமிழக அமைச்சரவையில் 15 பேருக்கு முதல் முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 19 பேர் ஏற்கனவே அனுபவம் கொண்டவர்கள்.
கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முதல் முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கருப்புப் பூஞ்சை: அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து கிடைக்க ராமதாஸ் கோரிக்கை!

Halley Karthik

சட்டப்படி செல்வதால் எங்கு சென்றாலும் வெற்றி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Dinesh A

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்-அமைச்சர் பதில்

Web Editor