தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..’ எனக்கூறி மு.க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது.
மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நேராக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவரை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதலமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் முதலமைச்சருக்கான இருக்கையில் அமர்ந்தார்.







