முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில், 33 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 33, 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது, 2 லட்சத்து 19 ஆயிரத்து 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 ஆயிரத்து 317 பேர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 13 லட்சத்து 61 ஆயிரத்து 204 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 6247 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 60 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 5023 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கோவையில் 3166 பேருக்கும் செங்கல்பட்டில் 2041 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1119 பேருக்கும் திருவள்ளூரில் 1835 பேருக்கும் திருச்சியில் 1569 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

நடிகை ரைசாவிற்கு மருத்துவர் பைரவி செந்தில் பதில் நோட்டீஸ்!

Halley karthi

பாலினம் பாகுபாட்டால் 85% பெண்களுக்கு ஊதிய உயர்வு புறக்கணிப்பு!

Gayathri Venkatesan

கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையை துவக்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Saravana Kumar