அமலுக்கு வந்த இ-பதிவு முறை!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே பயணம் செல்ல இ-பாஸ் பதிவு முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு…

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே பயணம் செல்ல இ-பாஸ் பதிவு முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசியப் பணிகளான திருமணம், உறவினர் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்ய இ- பாஸ் பதிவு முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை இணையதளத்தில் ((www.eregister.tnega.org)) பதிவு செய்து, உடனடியாக பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.