தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புக்களின்…

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது கடைகள் திறப்பு நேரத்தை குறைப்பது, பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இனிவரும் நாட்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.