தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பில் 4வது இடத்தில் உள்ள தமிழகத்தில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 9,344 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது, 9,80,728 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 9,02,022 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று 5,263 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 65,635 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 99,050 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 2,07,39,160 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பானது 13,071 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,75,649 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







