முக்கியச் செய்திகள் இந்தியா

ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!

அனைத்து மாநிலங்களிலும் பொது சுகாதார வசதிகளுக்காக ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.47 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,77,150 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,38,423 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 12.26 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.28 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 18,01,316 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் இதனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 162 பிஎஸ்ஏ ஆலைகளில் 33 நிறுவப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், சண்டிகர், குஜராத், பீகார், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

கொரோனா தீவிரம்.. பெரிய பட்ஜெட் படங்களின் ஷூட்டிங் பாதிப்பு

Karthick

இந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை: புத்த கயாவில் நிறுவப்படுகிறது!

Jeba

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்!

Ezhilarasan