“தமிழ்த்தாய் வாழ்த்து: வெறும் தீர்மானத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டம் இயற்ற வேண்டும்!” – ரகுபதி

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டம் இயற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அர்சு நிகழ்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டயம் முதலில் பாட வேண்டும் என்ற தனித் தீர்மானம் நிறைவேற்ரப்பட்டது. இதனைத்தொடர்து திமுக முன்னால் அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“ தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூடி இருப்பது வரவேற்கத்தக்கது. எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலிலேயே தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். ஆனால் ஆளுநர் அல்லேக்கர் வந்து தமிழ் தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இருக்கிறார்.

அனைத்து அர்சு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று சட்டம் இயற்ற வெண்டும். ஒன்றிய அரசு என உச்சரிக்க பயப்படும் இந்த அரசு சட்டத்தை கொண்டு வருமா? வெறும் தீர்மானம் நீர்த்துப் போகும். தீர்மானம் ஒன்றிய அரசை கட்டுப்படுத்துமா?, ஆளுநரை கட்டுப்படுத்துமா?. நாங்கள் சட்ட புருவம் அங்கீகாரம் கேட்கின்றோம். சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும், சட்ட அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் ஆளுநர் போன்றவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி விடுவார்கள்.

வெறும் தீர்மானம் தீர்வாகாது அதுக்கு சட்டம் ஏற்றுவது மட்டுமே தீர்வாகும். வேண்டுமென்றால் பள்ளிகளில் நாம் வேண்டுமென்றால் பாடி கொள்ளலாமே தவிர அரசு நிகழ்வுகளில் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. திமுக செய்தது போல சட்டபூர்வமான முன்னெடுப்பை இந்த அரசு செய்ய வேண்டும்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.