புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் என்பவர் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் பாக்குடி வழியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது பாக்குடி பெரிய குடும்பம்பட்டி சாலையில் இவரை வழிமறித்த மர்ம நபர்கள், படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகராஜ் ஏற்கனவே கோங்குடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




