தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கையால் நிதி பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு “ஒயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள ஓராண்டில் தமிழ்நாடு அரசின் பணிகள் அணிவகுப்பு புகைப்படக் கண்காட்சியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் கலோன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் இனி வரும் போட்டி தேர்வுகளில் தமிழில் 40 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றார்.
அத்துடன், தமிழகத்தின் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் நிதி வருவாய்
அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் முதல் 6 மாதத்தில் சுமார் 4 ஆயிரம் கோடி
மட்டுமே வருவாய் பற்றாக்குறை இருந்துள்ளது. தமிழகம் நிதி பற்றாக்குறை இல்லாத
மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும், செலவுகள் கட்டுக்குள் கொண்டு
வந்துள்ளதால் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வரும் போது 62 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை இருந்தது. தமிழக அரசின் நடவடிக்கையால் நிதி பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் 46 ஆயிரம் கோடியாக நிதி பற்றாக்குறை உள்ளது. எதிர் வரும்
பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை இன்னும் குறைக்கப்படும்” என கூறினார்.