50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் தமிழகத்திற்கு மாற்றம் தேவை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சி இருந்து வருவதை சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் இருந்து மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 70 கோடி ரூபாய் செலவு செய்வதற்கு தயாராக இருந்தால்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை, திராவிடக் கட்சிகள் ஏற்படுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டிய சரத்குமார், இதனால், எளிய மக்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளதாகக் கூறினார்.