முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல், மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என்று தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சட்டமன்றத்தில் யார், யாரை எங்கே உட்கார வைப்பது என்பது என்னுடைய முடிவு என்று கூறிய அவர், அதிமுக எதிர்க்கட்சித் தலைவருக்கான இருக்கை விவகாரமானது ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் :  உயர்நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை – உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவிப்பு

வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகள் குறித்து மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும், ஆளுநர் உரையின் போது பேரவை மாடத்தில் அமர்ந்து செல்போன் வாயிலாக வீடியோ எடுத்த விவகாரம் குறித்து உரிமைக் குழு முடிவெடுக்கும் என்றும் அப்பாவு தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ம் தேதி கூட உள்ளதும், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாணவர்கள் உயிரிழப்பு

EZHILARASAN D

பஞ்சாப் முன்னாள் அமைச்சரை கைது செய்தது ஊழல் தடுப்புத் துறை

Web Editor

ரொனால்டோவின் ‘லைக்ஸ்’ சாதனையை முறியடித்த மெஸ்ஸி

Vandhana