கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தர இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில்தான் திருவிழாக்களும் அதிகமாக நடைபெறும். பள்ளி விடுமுறை என்பதால் கோயில்களில் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கையும் இந்த சமயங்களில் அதிகரிக்கும். வரும் கோடை காலத்தில் பக்தர்கள் எந்தவித சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடைய இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு கோடை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான குடிநீர், நீர்மோர், எலுமிச்சை பானம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், திருக்கோயில்களில் நடைபாதைகளில் சூரிய வெப்பத்தை தவிர்க்க குளிர்ச்சி தரும் வகையில் வெண்மை நிற வண்ணம் பூசப்பட வேண்டும் எனவும் தேங்காய் நார்களினால் ஆன தரைவிரிப்புகள் பக்தர்கள் நடக்கும் நடைபாதையில் அமைக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேவையான இடங்களில் நிழற்பந்தல் அமைத்து மின்விசிறிகள் பொருத்த வேண்டும் என்று அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி : ”விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்” – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்
இதனிடையே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்க கடந்த 22-ம் தேதி முதல் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.