Skip to content
December 29, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » tamil nadu governments budget filing stamp release
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் – முத்திரைச் சின்னம் வெளியீடு!

நாளை தாக்கலாகவுள்ள தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து…

Author Avatar

Web Editor

February 18, 20244:59 pm BudgetGovernorlogoNews7Tamilnews7TamilUpdatesRN Ravitamilnadu assemblyThangam thennarasuTN AssemblyTN Govt

நாளை தாக்கலாகவுள்ள தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை (பிப். 19) காலை 10 மணிக்கு கூடுகிறது. 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (பிப்.19) தேதியன்று தாக்கல் செய்யவுள்ளார். நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரும் 20-ம் தேதியன்று தாக்கல் செய்கிறார். 

இந்நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021-ம் ஆண்டில் கொரோனாவை முறியடித்து, காலமல்லாக் காலத்தே புயலும், மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், மக்களின் துயர் நீக்கி, நமது மாநிலத்திற்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும், உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும், முறையான, சிதையாத, கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து, தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழ்நாட்டினை செலுத்திடும் நோக்கில் திமுக அரசு “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

”புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடு” – எடப்பாடி பழனிசாமி…!

By Web Editor December 29, 2025

”மக்களின் துயரத்தை போக்காமல் கொண்டாட்டம் நடத்தும் முதலமைச்சர்” – அன்புமணி ராமதாஸ்…!

By Web Editor December 29, 2025

“திமுக ஆட்சியில் கொலை வெறியுடன் திரியும் சிறார்கள்” – நயினார் நாகேந்திரன்…!

By Web Editor December 29, 2025

அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும் – ராமதாஸ் பேச்சு…!

By Web Editor December 29, 2025
#ट्रेंडिंग हैशटैग:BudgetGovernorlogoNews7Tamilnews7TamilUpdatesRN Ravitamilnadu assemblyThangam thennarasuTN AssemblyTN Govt

Post navigation

Previous Previous post: “NDA 400 இடங்களை பெற வேண்டும் ; நான் 3வது முறை பிரதமராக வேண்டும் என்பதற்காக இதை கேட்கவில்லை” – பிரதமர் மோடி பேச்சு!
Next Next post: 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading