புதிதாக திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா அல்லது கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இதற்கான கட்டுமான பணிகள், 2019ல் துவங்கி தொடர்ந்து கட்டுமானப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றனர் குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.
மேலும் இதில் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில்,
புதிய பேருந்து நிலையத்துக்கான அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. பயன்பாட்டு வசதிகள், பூச்சு வேலை, மின்சார இணைப்பு போன்ற பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்த பணிகள் அடுத்த ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கிளாம்பக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திட்டம் தொடங்கப்பட்ட கிளாம்பக்கம் பேருந்து நிலையம் தற்பொழுது திமுக ஆட்சி காலத்தில் பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையமாக உருவாகிக் கொண்டிருக்கும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திமுக அரசு யார் பெயரை சூட்ட உள்ளது என்றால், 1996 – 2001 ஆண்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசால் கோயம்பேடு பேருந்து நிலையம் திட்டம் தொடங்கப்பட்டது, அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டில் கட்டிடப் பணிகள் நிறைவு பெற்ற அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கோயம்பேடு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் சூட்டினார்.பெயர் மாற்றம் அறிவித்தவுடன் அப்போதைய திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அடுத்தவர் குழந்தைக்குத் தன் கட்சியின் நிறுவனர் பெயரை வைக்க அதிமுக ஆசைப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அதிமுக ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது திமுக ஆட்சி காலத்தில் பணிகள் நிறைவு பெற்று திமுக அரசால் பேருந்து நிலையம் திறக்கப்பட இருப்பதால், இந்த கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா அல்லது கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.
-தாமரைக்கனி








