முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் உறவினர்கள் போராட்டம்

இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் நான்கு மணி நேரத்திற்கு மேலாக இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், காளிப்பேட்டை அருகே உள்ள நொனங்கனூரில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இக்கிராமத்தில் இறந்தவர்களை பொதுவழியின் மூலம் அங்குள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று நொனங்கனூர் கிராமத்தை சேர்ந்த தாதன் என்பவர் இறந்த நிலையில் அவரின் உடலை அடக்கம் செய்ய உடலை வழக்கமாக செல்லும் பொதுவழியில் எடுத்து சென்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் மாயானத்திற்கு செல்லும் பாதை தங்கள் பட்டா நிலத்தில் உள்ளது என மாயனத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கற்களை போட்டு உடல்களை கொண்டு செல்ல வழி விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய நிரந்தர பாதை வசதி வேண்டும் என இறந்தவரின் உடலோடு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொதுவழி பாதையில் இருந்து கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த செல்வம் கற்களை அகற்றியதை தனது சொல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இதனால், செல்வத்திற்கும் கிராம மக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு செல்வம் கிராமத்தை சேர்ந்த சிலரை தாக்கி உள்ளார். பின்னர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து செல்வத்தை துரத்தி சென்று கல் மற்றும் தங்களின் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற காவல்துறையினரையும் கிராம மக்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”ரஜினிகாந்த் சொன்னதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்”- வைகோ

Web Editor

புதுச்சேரியில் 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா?

Gayathri Venkatesan

மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று பணி செய்வதில்லை- அமைச்சர்

G SaravanaKumar