இமானுவேல் சேகரனாருக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் வீர வணக்கம்!

சமத்துவம், சுயமரியாதைக்காகப் போராடிய இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில், அவருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் வீர வணக்கம் செலுத்தினார்.

இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிடுள்ளார். அந்த பதிவில், “சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது.

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.