இமானுவேல் சேகரனார் பிறந்தநாள்: ஸ்டாலின் புகழாரம்!

இமானுவேல் சேகரனார் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து, சமத்துவத்தை நிலைநாட்ட ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரைப் போற்றும் வகையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “சாதி ஒழிப்பிற்காகவும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள்.

இந்நாளை அரசு விழாவாகக் கொண்டாடிட ஆணை பிறப்பித்து, இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபமும் அமைத்து அவரது நினைவைப் போற்றியது நமது திமுக அரசு. ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.