முதலமைச்சர் விஜய் தலை​மை​யில் இன்று கூடும் தமிழ் நாடு அமைச்சரவை…!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. ஆதரவளித்த கட்சிகளான விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் உட்பட 35 அமைச்சர்கள் உள்ளனர். மேலும் வளர்ச்சி பணிகளுக்காக மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டம் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டமாகும்.

இக்கூட்டத்தில் தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்றுவது, பட்​ஜெட் தாக்​கல், ஆளுநர் உரை​ உள்ளிட்​டவை குறித்​து விரி​வாக ஆலோ​சிக்​கப்பட உள்​ளது.

அதே​போல, மேகே​தாது அணை விவ​காரம், டாஸ்​மாக் கடை மூடல், பயிர்க்​கடன்​ தள்​ளு​படி ஆகியவை தொடர்​பாக​ முக்​கிய முடிவு​கள் எடுக்​கப்​படலாம் என்றும் கூறப்​படு​கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.