புதிய கட்சியா..? பாஜகவில் நீடிப்பா..? – இன்று அறிவிக்கும் அண்ணாமலை…!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான தனது முடிவை இன்று அறிவிக்கிறார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகின. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் நிதின் நிபின் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது அவர் தமிழ் நாடு பாஜக தலைவர்கள் மீது குற்றசாட்டுகள் அடங்கிய கடிதம் ஒன்றை வழங்கியதாக கூறப்படுகிறது.

நேற்று அண்ணாமலையின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 5) சமூக வலைதளம் மூலமாக நேரலையில் தோன்றும் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதா…? அல்லது பாஜகவிலேயே தொடர்வதா…? என்கிற தனது முடிவை அறிவிக்கிறார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

https://instagram.com/annamalai_kuppusamy

https://facebook.com/share/18bJfU31t4/

https://youtube.com/@annamalai.k

https://x.com/annamalai_k

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.