மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு…!

மாநிலங்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – ல் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவரது இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

சட்டமன்றத்தில் 107 இடங்கள் கொண்ட தவெக-வே அந்த எம்.பி. பதவியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளார்.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.