தமிழக அமைச்சரவை மாற்றம்? ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த கடிதம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள்…

Tamil Nadu cabinet change - official announcement tomorrow!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த கடிதம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா? என்பது குறித்தும் நாளைய அறிவிப்பில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், துணை முதலமைச்சர் பதவி அறிவிக்கப்படுமா? புதிதாக அமைச்சர்களாக யாரேனும் அறிவிக்கப்படுகிறார்களா? என்ற கேள்விக்கு நாளை விடை கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதன்படி, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரை சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை வந்த பிறகு அதற்கான ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.