ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை (ஜன.7) தொடங்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை…

ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை (ஜன.7) தொடங்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.   அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது.  இதில் வெற்றி பெற்று அமைந்த மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வருகிற மே மாதம் முடிகிறது.

இதையும் படியுங்கள்: சென்னை மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்!

இதனால் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.  2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள திமுக,  காங்கிரஸ்,  சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.

இந்த நிலையில் ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை (ஜன.7) தொடங்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.