சுவாமிமலை முருகன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 6ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை உலகெங்கும் வாழும்…

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 6ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் வழிபட்டு வருகின்றனர். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற பழமொழிக்கேற்ப முருகன் பல பகுதிகளில் இருந்தாலும் தமிழகத்திலுள்ள அறுபடை வீடுகள் சிறப்பு வாய்ந்ததாகும். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அறுபடை வீடுகளுக்கு வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். அப்பேற்பட்ட சிறப்பு வாய்ந்த அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் இத்திருக்கோயிலில் தைப்பூசம், ஆவணி, மாசி , சித்திரை உள்ளிட்ட மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமர்சையாக தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்வான முருகப்பெருமானின் திருத்தேரோட்டம் மே 6ம் தேதி நடைபெற உள்ளது.

கொடியேற்ற நாளை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.