சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். சிங்கம்புணரியில் அமைந்துள்ளது அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில். இக்கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சிங்கம்புணரியில் அமைந்துள்ளது அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில். இக்கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில்
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கானபக்தர்கள் திரளும் இத்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 18ம் தேதி வெகு சிறப்பாக தொடங்கியது.பக்தர்கள் அதுமுதல் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர்.

விழாவின் ஓவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து கடந்த 24ம் தேதி பால்குடம் எடுத்து வந்து
அம்மனை வழிப்பட்டனர்.விழாவின் சிகர நிகழ்வான நேற்று நேர்த்திக்கடன் வேண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்த தங்கள் கடனை செலுத்தினர்.

மேலும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கரகத்தில் அம்மன் எழுந்தருளினார். விழாவை காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களால் சிங்கம்புணரியே திருவிழா கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.