மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று சாலையில் பள்ளம் ஏற்ப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் தரமற்ற முறையிலிருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில், கடந்த 5 வருடங்களாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பாதாளசாக்கடை குழாய்கள் தொடர்ந்து உடைப்பட்டு வருவதால் சாலைகளில் 20 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதை சரிசெய்வது தொடர்கதையாக உள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வுக்கான நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தும் சரி செய்யப்படவில்லை. கச்சேரிசாலை, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்ப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளத்தை சுற்றி பேரிகார்டு வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாதாளசாக்கடை பிரச்சனை குறித்து தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு ஆய்வு செய்து புதிய பாதாளசாக்கடை கொண்டு வருவதற்கு அரசுக்கு சட்டமன்ற மதீப்பீட்டுகுழு பரிந்துரைக்குமென்று தெரிவித்திருந்தனர். ஆனால் இன்னும் தீர்வு காணவில்லை, தற்போது இப்பள்ளத்தை நகராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்து வருகின்றனர்.
—-அனகா காளமேகன்