முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்: பாஜக புகார்

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது, சட்ட ரீதியான போராட்டம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வின் பாதிப்பு குறித்து அமைக்கப்பட்ட குழுவால் எந்த பயனும் இல்லை என்றும், அதனால் தான் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறினார். இது கொள்கை ரீதியான போராட்டம் அல்ல என்றும், சட்ட ரீதியான போராட்டம் என்றும் கரு.நாகராஜன் விளக்கம் அளித்தார்.

நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்ப்பதாக கூறிய அவர், சூர்யாவுடன் பொது விவாதம் நடத்த பாஜக எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கால் குறைந்த மின்சார பயன்பாடு!

அசாம் வனப்பகுதியில் 18 யானைகள் உயிரிழப்பு: மின்னல் தாக்கியதா?

Halley karthi

கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ezhilarasan