முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்களை ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரை கொரோனா காரணமாக, 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்பேரவை இன்று கூடியதும் பாஜக உறுப்பினர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீடு குறித்து பேசினர். குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேச அனுமதிக்கவில்லை என்று கூறி அவர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் பாஸ்கர் ஜாதவை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சபாநாகரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதற் காகவும் கூச்சல் குழப்பதில் ஈடுபட்டதற்காகவும் 12 பாஜக எம்.எல்.ஏக்களை ஓராண்டு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

‘பாஜக உறுப்பினர்கள் மீது தவறானக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. பாஜக உறுப்பினர்கள் எந்த துஷ்பிரயோகத்திலும் ஈடுபடவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக இட ஒதுக்கீட்டுக்காக, 12 எம்.எல்.ஏக்களை மட்டுமல்ல, அதற்கும் மேலான உறுப்பினர்களை தியாகம் செய்ய இருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜாதவ் கூறும்போது, ’தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டில் முன்னிலையில், பலர் சொல்ல முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்தனர். சிலர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி: கருணாநிதி கோரிக்கைக்கு உயிர்கொடுப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Ezhilarasan

நீட் தேர்வு பாதிப்பு: நாளை அறிக்கை தாக்கல்

Halley karthi

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தல்!

Gayathri Venkatesan