முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் உணவகங்கள் திறப்பு: கொரோனா விதிமுறைகளை கடைபிடித்த வாடிக்கையாளர்கள்

தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு இன்று அமலுக்கு வந்ததால், உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உணவகங்கள் செயல்படுகின்றன.

கொரானா பரவல் காரணமாக உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த தடை விதிக்கப்பட்டிருந்தது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட்டது, இந்நிலையில் கொரானா தொற்று குறைந்ததை அடுத்து வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்தி வருகிறார்கள், உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை, கிரிமி நாசினி வழங்கப்படுகிறது, 4 பேர் அமர்ந்து உணவு அருந்த கூடிய மேஜையில் 2 பேருக்கு மட்டுமே உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் திறக்கப்பட்ட உணவகங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து உணவு உட்கொண்டனர்.

 

Advertisement:
SHARE

Related posts

“தமிழ்நாட்டில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley karthi

மதமாற்றம் செய்வதற்கு வெளிநாட்டு நிதி: அமலாக்கப்பிரிவு தகவல்

Halley karthi

தவறான தகவல்களை பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

Halley karthi