முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

வெளியாகிய கருத்துக்கணிப்பு… குஜராத் தேர்தல் யாருக்கான பாடம்?


வசந்தி பாரதி

கட்டுரையாளர்

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகியவற்றின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் 8 தேதி வெளியாகும் நிலையில்
இருமாநிலத்திலும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

கடந்த காலங்களில் ஆளும் பாஜக,காங்கிரஸ் இடையே மட்டுமே இருமுனைப் போட்டியாக இருந்த குஜராத் தேர்தல் களம், இந்த முறை ஆம் ஆத்மி வருகையால் குஜராத் அரசியல் களத்தில் மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது என்றே கூறலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தை பொறுத்தவரையில் ஆட்சியமைக்க 92 இடங்கள் பெற்றிருந்தாலே ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். இந்த நிலையில் பாஜக கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும், அக்கட்சிக்கு இது வரலாற்று வெற்றியாக அமையும் என்றும் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆண்டுகள் தொடர்ந்து பாஜகவின் இரும்பு கோட்டையாக இருக்கும் குஜராத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக பாஜக வெற்றி பெறும் என்று இந்த கருத்துகணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 2017 தேர்தலில் 79 இடங்களை பெற்ற காங்கிரஸ் இந்த முறை மோசமான தோல்வியை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து குஜராத்தில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி மேற்கொண்ட தீவிர பிரசாரம் குஜரத்தில் எடுப்படவில்லை எனவும் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் கூறுகின்றன.

குஜராத்தில் கடந்த 2017யில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், அதன் வெற்றி வாய்ப்பு குறைந்ததற்கு இரு முக்கிய காரணம், ஒன்று படேல் இடஒதுக்கீடு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல் ஆதரவு காங்கிரசுக்கு இருந்ததும். இரண்டாவது, மோர்பி, சுரேந்திராநகர், ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட 48 தொகுதிகளானது சவுராஷ்டிரா மக்கள் இருக்கும் தொகுதி. இதில் காங்கிரஸ் கட்சிக்குதான் பெரும் ஆதரவு இருந்தது. கடந்த 2017 இல் நடந்த குஜராத் தேர்தலில் ஆளும் பாஜக வெறும் 99 இடங்களையே கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் 79 இடங்களை வென்று இருந்தது. இந்த இரு கட்சிகளும் வாக்கு வித்தியாசம் என்று பார்த்தால் வெறும் 3.30% தான் .

காங்கிரஸ் கை ஒங்கியதே பாஜகவின் வெற்றிகுறைந்ததிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை இப்படியே விட்டால் தனது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்கூட்டியே சுதாரித்துகொண்ட பாஜக, அடுத்துவரும் தேர்தலுக்கான வியூகத்தை அப்போதே கையில் எடுத்துவிட்டது. குறிப்பாக அமித் ஷா ஒரு ஜெனரல் டயர் போல் நடந்துகொள்கிறார்.பாஜக எனக்கு ரூ. 1200

கோடி கொடுத்து இழுக்க பார்க்கிறது என்று பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த அதே ஹர்திக் பட்டேல் பின்னர் பாஜகவில் இணைந்தது அந்த கட்சிக்கு பெரும் பலம் எனவும், இது தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பட்டேல் சமூகத்தினர் வாக்குகள் குஜராத்தில் மீண்டும் பாஜகவிற்கு திரும்பி இருப்பதையும் கணிப்புகள் காட்டுகிறது.

அதேபோல 2017 தேர்தலுக்கு பிறகு காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவிய 20 எம்.எல்.ஏ.க்களில், 10க்கும் மேற்பட்டவர்கள் சவுராஷ்டிராவை சேர்ந்தவர்கள்,அவர்களின் பெரும்பாலோனர்களை பாஜக வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கி இருப்பதற்கு முக்கிய நோக்கம் சவுராஷ்டிரா மக்களின் வாக்குகளை அறுவடை செய்யதான் என்பதை தற்போது கருத்துக் கணிப்புகள் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளன.

காங்கிரசை பொறுத்தவரையில், கடந்த 2017 நடந்த தேர்தலில் 79 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ், இம்முறை காங்கிரஸின் இடங்கள் குறையக்கூடும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் குஜராத்தில் நடந்த மோர்பி பாலம் விபத்து அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் 2002 குஜராத் கலவரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பீல்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்றுவந்த குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது போன்றவை மக்கள் மத்தியில் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக பார்க்கப்பட்டது.
ஆயினும் இந்த பின்னடைவுகளை எதிர்க்கட்சியான காங்கிரஸ் சரியான வியூகம் அமைத்து பயன்படுத்த தவறிவிட்டது என்பதையே இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றனர்.

பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் நடத்திவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி குஜராத் மாநில தேர்தல் பரப்புரைக்கும் சில முறை சென்றிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் போன்ற ஒருசில தலைவர்களே குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று இருந்தனர். ஆளும் கட்சியக இருக்கும் பாஜக எடுத்த முன்னெடுப்பில் 50% முயற்சியை கூட காங்கிரஸ் கையில் எடுக்காததே வாக்குகள் குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை பறிக்கொடுத்த காங்கிரஸ் எப்படியாவது குஜராத் அரியனையை பிடிக்க நினைத்த நிலையில் எதிர்கட்சியாகவே மீண்டும் தொடர இருக்கிறது காங்கிரஸ்.

டெல்லி, பஞ்சாப் வெற்றிகளை தொடர்ந்து குஜராத்திலும் வெற்றி கொடி நாட்ட நினைத்த ஆம் ஆத்மி கடும் பிரச்சாரங்களை முன்னெடுத்தது. ஆம் ஆத்மியின் யூக்தி அதன் தேர்தல் அறிவிப்புகள் தான் அந்த வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்திருந்தது.
இப்பினும் குஜரத்தில் ஆம் ஆத்மியின் வியூகம் எடுப்படவில்லை என்பதையே தற்போது வெளியாகி இருக்கும் கருத்துகணிப்புகள் கூறுகிறது.

கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவிற்கு சாதகமாக வந்திருந்தாலும், மக்களின் உண்மையான தீர்ப்பு வரும் 8 ஆம் தேதி தான் தெரியும்.அன்றைய தினம் தான், குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகள் யார் ஆட்சி அமைகிறது என்பது உறுதியாக தெரியும். ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அல்லது பாஜக தொடர்ந்து 7வது முறையாக குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைக்குமா என்பது 8ந்தே தெரிந்துவிடும்.

-வசந்தி பாரதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை

EZHILARASAN D

பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy

இந்தி திணிப்புக்கு எதிராக ராகுல்காந்தி திடீர் சீற்றம்

Web Editor