அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி மட்டுமே என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் இதுகுறித்து திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், ”எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றி தற்போதைய வெற்றி மட்டும் தான். பண பலத்தால் மட்டுமே அந்த கட்சி இயங்கி வருகிறது. 2017 ஏப்ரலில் இருந்தே டெல்லி தான் அதிமுகவை இயக்குகிறது. அது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தேர்தலில் எந்தவித வெற்றியையும் தராது. ஜெயலலிதாவின் கொள்கையையும், கட்சித் தொண்டர்களையும் ஒருங்கிணைத்தது உண்மையில் அமமுக மட்டுமே.
இதையும் படியுங்கள் : அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; இபிஎஸ் வசமானது அதிமுக
எடப்பாடி பழனிச்சாமி கையில் இரட்டை இலை இருந்தாலும், அது ஜொலிக்க முடியாது. கமல்ஹாசன் பேசுவதை எல்லாம் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சீரியஸ் ஆக கருதக்கூடாது. ஏனென்றால் அவர் நடிகராக இருந்து தற்போது சிறந்த அரசியல்வாதியாக உருவாகி வருகிறார். அவர் தற்போதைக்கு ஒரு அணியில் இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் ஒரு சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு சாதகமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதன்படி, சிறந்த அரசியல்வாதியாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு சமூகத்தை பற்றி சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தேர்தல் ஆணையம்
கட்டுப்பாடுகளை வைத்துள்ளதாக தெரிகிறது. எனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய பேச்சுக்களை சீமான் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.