ஐபிஎல்-சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாகிறார் மார்க்ரம்!

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்கா பேட்டர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகச் செயல்படவில்லை. இதையடுத்து, 2023…

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்கா பேட்டர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகச் செயல்படவில்லை. இதையடுத்து, 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஹைதராபாத் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனால், கேப்டன் இல்லாமல் தவித்து வந்தது ஹைதராபாத் அணி. இந்நிலையில், 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி பட்டியலை பிசிசிஐ அறிவித்ததையடுத்து, ஹைதராபாத் அணிக்கு யார் கேப்டனாக செயல்படுவார்கள் என்பது பேசுபொருளானது.

இந்நிலையில், ஐபிஎல் 2023 போட்டிக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்கா பேட்டர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 28 வயதான மார்க்ரம் தென்னாப்பிரிக்கா அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகள், 47 ஒருநாள் போட்டிகள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ 20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைமை வகித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பேட்டர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.