முக்கியச் செய்திகள் தமிழகம்

“எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்து

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம்  இன்று அளித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “எல்லாம் நன்மைக்கே” என்றார்.  

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் கோரிய வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்த இந்த வழக்கில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பொதுக்குழு கூடி பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் இதில் ஓபிஎஸ் தரப்பும் இடம் பெற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு
வருகை தந்த அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் உச்ச
நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு என
தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் எந்த குழப்பமும் இல்லை. இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திடும் அதிகாரம் இல்லை என கூறினார்.
எங்களுக்கும் அதிகாரமில்லை தமிழ் மகன் உசேனை தான் குறிப்பிட்டுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் எல்லாம் நன்மைக்கே என வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் நன்மைக்கே எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் என்றால் என்ன? ஒரு அறிமுகம்

G SaravanaKumar

டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்துக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா

NAMBIRAJAN

திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

Gayathri Venkatesan